ஈரோட்டில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 4 முதியவர்கள் மீட்பு!

 

ஈரோட்டில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 4 முதியவர்கள் மீட்பு!

ஈரோடு ஆக 28.
ஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்று சுற்றித்திரியும் முதியவர்கள் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் முதியவர்களை ஜீவிதா பவுண்டேஷன் தன்னர்வலர்கள் மீட்டு அவர்களை சுத்தப்படுத்தி புது ஆடைகள் உடுத்தி அவர்களை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்து வருகின்றனர் இன்று ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் தன்னார்வலர் மனிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் ஆதரவற்று இருந்த இரண்டு முதியவர்களை மீட்டனர் ஒரு முதியவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் வயது 70 எனத் தெரிவந்தது இவர்.

ஈரோட்டில் ஆதரவற்று சுற்றித்திரிந்த 4 முதியவர்கள் மீட்பு!

20 வருடங்களுக்கு முன்னால் ஈரோடு மாவட்டத்திற்கு வந்து பிச்சை எடுத்து பி ழைப்பு நடத்தி வந்தார் இந்த முதியவரை மீட்டு அவருக்கு முடிதிருத்தம் செய்து புதிய ஆடை உடுத்தினர் இதேபோல் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவா சலம் வயது 80 என்ற முதியவர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரோடுக்கு வந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார் அந்த முதியோரையும் மீட்டு அவருக்கு முடி திருத்தம் செய்து அந்த முதியவரை குளிக்க வைத்து அவருக்கு புது ஆடை உடுத்தினர் இதேபோல் கவுந்தப்பாடியில் ஒரு முதியவரும் நொச்சி காட்டு வலசு பகுதியில் ஒரு மூதாட்டியும் என இன்று ஒரு நாள் மட்டும் நாலு முதியவர்கள் மீட்கப்பட்டு ஒரு பாதுகாப்பான முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-ரமேஷ் கந்தசாமி