களமிறங்கும் புயல்… 17 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

 

களமிறங்கும் புயல்… 17 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

களமிறங்கும் புயல்… 17 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13 மற்றும் 14ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 15ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

களமிறங்கும் புயல்… 17 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

வருகின்ற 16 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸில் ஒட்டியிருக்கும்.

நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக , வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும்.

களமிறங்கும் புயல்… 17 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வட மேற்கு வங்க கடல் ,மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதி , தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.