கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூல்!

 

கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூல்!

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்து பணம் பெற்ற பயணிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நோக்கில் பிரதமரின் கிசான் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் உள்ளிட்ட சிறிய தேவைகளுக்காக குறுகிய கால கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் லட்சக் கணக்கான விவசாயிகள் இந்த திட்டத்தின் கடன் பெற்றிருக்கும் நிலையில், 11க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூல்!

அந்த புகாரின் பேரில் உடனே விசாரணை நடத்த வேண்டும் என்றும் முறைகேடு நடந்திருந்தால் உடனே தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன் படி இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 உயரதிகாரிகள் முறைகேடு செய்தது அம்பலமானதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இன்று காலை அதே மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது போல பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி வருகிறது.

கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூல்!

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடாக பணம் பெற்ற 42,000 பயனாளிகளிடம் இருந்து ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ளவர்களின் வங்கி கணக்கில் இருந்து முழு பணத்தையும் வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.