சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் இருந்து மக்களை காக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ள நிலையில் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 6,304 பேர் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டுமே 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருவதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது நபரும், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது நபரும், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 2 முதியவர்களும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

- Advertisment -

Most Popular

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன காரணம்? – கொந்தளிக்கும் சமூகநல ஆர்வலர்கள்

போக்சோ சட்டம் ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சொல்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் முன்...

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. கொடுத்தது. மேலும், மத்திய...

கேரள தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு...

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அரச அறிவித்தது. இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ....
Open

ttn

Close