4.3 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை #CoronaUpdate

4.3 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை #CoronaUpdate

கொரோனாவை வெல்ல உலக நாடுகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 59 லட்சத்து  741 பேர்.   கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 81  லட்சத்த்து 93 ஆயிரத்து 632 பேரைக் கடந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 61 ஆயிரத்து 251 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

4.3 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை #CoronaUpdate

இந்தியாவில் 37,66,108 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று (செப்டம்பர் 1) மட்டும் 78,169 பேர் புதிய நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்துவது முக்கியமான தீர்வாக இருக்கும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் தினம் 10 லட்சம் பரிசோதனைகள் எனும் இலக்கைக் கொண்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

4.3 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை #CoronaUpdate

இந்தியாவின் ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.3 கோடியை இன்று கடந்தது (4,33,24,834). இதில், 1,22,66,514 பரிசோதனைகளைக் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா செய்துள்ளது.

கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பரிசோதனைகள் செய்வதில் முன்னணியில் உள்ளன. மொத்த பரிசோதனைகளில் இந்த மூன்று மாநிலங்கள் 34% பங்காற்றியுள்ளன.

4.3 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை #CoronaUpdate

ஒரு நாளைக்கு இந்தியாவில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,16,920 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.