4.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகின்றன – சுகாதாரத்துறை

 

4.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகின்றன – சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என நிபுணர்களும் பரிந்துரைப்பதால் மக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். தடுப்பூசியை கண்டாலே மக்கள் பயந்து ஓடிய நிலை மாறி, நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

4.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகின்றன – சுகாதாரத்துறை

தடுப்பூசியின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ள சூழலில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது அரசை அதிருப்தி அடையச் செய்தது. கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வரும் என தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர விருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அனைத்தும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என தெரிவித்துள்ளது. சென்னை வரும் தடுப்பூசிகள் இன்று இரவே மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.