எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… பேரதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… பேரதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத் தீயாய் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல மாநில அரசுகள், முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும், பாதிப்பு கட்டுக்குள் வரமால் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. வட மாநிலங்களில் மருத்துவமனைகளில் இடமில்லாமல் நோயாளிகள் அவதிப்பட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஒரு சில தென்மாநிலங்களிலும் அதே போன்ற சூழல் நிலவுகிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… பேரதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,980 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… பேரதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!

இதன் மூலம், மொத்த பாதிப்பு 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 35,66,398 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறை போராடிக் கொண்டிருக்கும் சூழலில், பாதிப்புகள் இவ்வாறு அதிகரித்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.