4வது மனைவியின் 11வயது மகளை… தந்தை சிறையிலடைப்பு

 

4வது மனைவியின் 11வயது மகளை… தந்தை சிறையிலடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பாரதி தனது நாலாவது மனைவியின் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

4வது மனைவியின் 11வயது மகளை… தந்தை சிறையிலடைப்பு

ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் பாரதியின் முதல் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. முதல் மனைவி இறந்ததை அடுத்து இரண்டாவது திருமணம் செய்தார். அப்பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது . ஆனால் இரண்டாவது மனைவி பாரதியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

இதை அடுத்து மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் பாரதி. மூன்றாவது மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதன் பின்னரும் பாரதிக்கு பெண்களின் மேல் உள்ள மோகம் தீரவில்லை. சென்னையில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த போது ஜீனத் என்ற பெண் அவருக்கு அறிமுகமாகியிருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜீனத்தை நாலாவது மனைவியாக ஏற்றுக் கொண்டு அவருடனேயே வாழ்ந்து வந்திருக்கிறார். ஜீனத்தின் முதல் கணவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன.

4வது மனைவியின் 11வயது மகளை… தந்தை சிறையிலடைப்பு

பாரதியின் 6 குழந்தைகள், ஜீனத்தின் 2 குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர். எல்லோரும் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஜீனத்தின் பதினோரு வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் பாரதி.

காலையில் எழுந்ததும் தாயிடம் நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார் அச்சிறுமி. இதையடுத்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஜீனத். புகாரை அடுத்து பாரதியை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் தான் செய்த தவறை பாரதி ஒப்புக் கொண்டதால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாரதி சிறைக்கு சென்று விட்டதால் எட்டு குழந்தைகளும் மனைவியும் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.