4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…தேசிய கொடிகளுடன் விடிய விடிய போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள்!

 

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…தேசிய கொடிகளுடன் விடிய விடிய போராட்டம் நடத்தும்   இஸ்லாமியர்கள்!

மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியும் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

TN

இந்நிலையில்  இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம்  மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியும் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

TTN

முன்னதாக அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பினருடன் ராயபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் கோரிக்கை குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தாக தெரிகிறது.