4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 24 மணிநேரத்தில் ஓமனை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் கியார் புயலாக மாறியுள்ளது. தற்போது  தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ள கியார் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் ஓமனை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை, கோவா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில்  ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய நான்கு  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில்  லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.