4 மாசத்துல ரூ.5.47 லட்சம் கோடியை எட்டிய நிதிப் பற்றாக்குறை….. எப்படி சமாளிக்க போறீங்க மோடிஜி?

 

4 மாசத்துல ரூ.5.47 லட்சம் கோடியை எட்டிய நிதிப் பற்றாக்குறை…..  எப்படி சமாளிக்க போறீங்க மோடிஜி?

இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடியை எட்டி விட்டது.

மத்திய அரசின் மொத்த வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசம் நிதிப் பற்றாக்குறையாகும். இந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை ரூ.7.03 லட்சம் கோடியாக வைத்திருப்பதே மத்திய அரசின் இலக்கு.

நிதிப் பற்றாக்குறை

ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறது. கடந்த ஜூலை மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடியை எட்டி விட்டது. அதாவது முதல் நான்கு மாதங்களிலேயே நிதிப் பற்றாக்குறை நிர்ணயத்த (ரூ.7.03 லட்சம் கோடி) இலக்கில் 77.8 சதவீதத்தை எட்டி விட்டது. நிதியாண்டு முடிவடைய இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் நிதிப் பற்றாக்குறை இலக்கை காட்டிலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இந்த நிதியாண்டில் மத்திய அரசு மொத்தம் ரூ.27.86 லட்சம் கோடிக்கு செலவுகளை மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அரசுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.19.62 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, இந்த நிதியாண்டில் ரூ.7.04 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்கும்.

நிதி

முதல் நான்கு மாதங்களிலேயே மத்திய நிதிப்பற்றாக்குறை நிர்ணயம் செய்த இலக்கில் முக்கால் கிணறை தாண்டி விட்டதால் அதனை கட்டுக்குள் மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் மற்றும் உபரிநிதியாக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.