4 பேர் என்னிடம் தூதுவிட்டனர்: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

 

4 பேர் என்னிடம் தூதுவிட்டனர்: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிமுகவில் மீண்டும் சேர என்னிடம் தூதுவிட்டனர் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தேனி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிமுகவில் மீண்டும் சேர என்னிடம் தூதுவிட்டனர் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சியில் இருந்து பலர் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக தினகரனின் மனசாட்சி என கருதப்படும் தங்க தமிழ்ச்செல்வனும் விலக இருப்பதாக வெளியான தகவல் தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த தகவலை தங்க தமிழ்ச்செல்வன் மறுத்த பிறகு அவ்விவகாரம் ஓய்ந்தது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் 4 பேர் மீண்டும் அதிமுக-வில் சேர என்னிடம் தூதுவிட்டனர். செந்தில் பாலாஜியும் திமுக-வில் இணைவதற்கு முன்பு என்னிடம் தூதுவிட்டார் என்றார்