4 நாளில் ரூ.2.73 லட்சம் கோடி கொடுத்த பங்கு வர்த்தகம்….. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது..

 

4 நாளில் ரூ.2.73 லட்சம் கோடி கொடுத்த பங்கு வர்த்தகம்….. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. முதல் 2 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும் கடைசி 2 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. பல முன்னணி நிறுவனங்களின பங்கு விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்நிறுவன பங்குகளை வாங்கி குவித்தனர். பணவீக்கம் குறைந்தது,  இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.54 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.73 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 429.10 புள்ளிகள் உயர்ந்து 31,588.72 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 154.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,266.75 புள்ளிகளில் முடிவுற்றது.