4 நாட்கள் கெடு! பதற்றத்தில் மத்திய அரசு!

4 நாட்கள் கெடு! பதற்றத்தில் மத்திய அரசு!

‘இன்னும் நான்கே நான்கு நாட்கள் தான் இருக்கிறது’ என்று நகங்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லியில் இருக்கும் பாஜக த் தலைவர்கள். ஒரு பக்கம் நிலைமையை சமாளிக்க தற்காலிக சிறைச்சாலைகள் எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன. விஷயம் அப்படி என்று மனதிற்குள்ளேயே புழுங்கி வருகிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் கறை மாறாத கருப்பு பக்கங்களால் எழுதப்பட்டிருப்பதை எப்படி மீண்டும் கறையாகாமல் பார்த்துக் கொள்வது என்கிற தவிப்பு மேலிடத் தலைவர்களிடத்தில் இருந்து வருகிறது.

judge

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த மாதம் 14ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். விடுமுறை தினங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவருடைய வேலை நாட்களாக இன்னும் நான்கு தினங்களே மீதமிருக்கின்றன. இந்நிலையில், ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில முக்கிய வழங்குகளில் தீர்ப்பளித்து விட்டு செல்வார் என்கிற எதிர்பார்ப்பு நாடு முழுவதுமே பரவியுள்ளது. அதில் அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக அயோத்தி வழக்கு பார்க்கப்படுகிறது. இதன் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அங்கு, 8 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.  தீர்ப்பு வந்த பிறகு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் பழி அவர்கள் மீது வரக்கூடாது என்று இந்த மாதம் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் ரத்து செய்துள்ளது. மேலிடத்தில் இருந்து எதிலும் பெரிதாக தலையிட வேண்டாம், கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருக்கும் பெயரை இந்த வழக்கின் தீர்ப்பின் பின்னால் நடக்கும் சம்பவங்கள் கெடுத்து விடக் கூடாது என்கிற பதற்றம் கட்சியின் தலைவர்களிடத்தில் எழுந்துள்ளது. 

ayothiya

இந்நிலையில், உத்தரபிரேசம் மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.