4 நாட்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு!

 

4 நாட்களுக்கு சென்னை, கோவை, மதுரையில்  முழு ஊரடங்கு!

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்றும்  சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.  இந்த நாட்களில் மருத்துவமனைகள்,  பரிசோதனை கூடங்கள் வழக்கம்போல் செயல்படலாம். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் வங்கிகளில்  33 % பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள்,  ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

tt

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும்.  முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் தெரிகிறது. 

அதேபோல் பத்திர பதிவு அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.