4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

 

4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்எனவும் அவர் அறிவித்தார்.

 இதையடுத்து, தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இதனிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. எனவே, காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் விடுபட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

admk candidate

இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, சூலூரில் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் எஸ்.முனியாண்டி, ஒட்டப்பிடாரத்தில் பெ.மோகன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

இதையும் வாசிங்க

ஸ்டாலினின் ’ஆர்.கே.நகர்’ பாணியை கையிலெடுக்கும் எடப்பாடி… டி.டி.வி.தினகரன் சமாளிப்பாரா..?