4 கேமராக்கள் கொண்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம்

 

4 கேமராக்கள் கொண்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேங்காக்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் கேமரா அம்சங்கள் கவர்ந்து இழுப்பதாக உள்ளதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். இதன் அடுத்த வெர்ஷனான ரெட்மி நோட் 6 ப்ரோ குறித்து இணையத்தில் பலமுறை தகவல்கள் லீக் ஆனது.

இந்நிலையில், தற்போது ஒருவழியாக இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் தாய்லாந்தில் நடந்தது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

அட்ரினோ 509 GPU

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI

ஹைப்ரிட் டூயல் சிம்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 6,990 தாய் பட் (இந்திய மதிப்பில் ரூ.15,660) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.