4 கிராம வங்கிகளை பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு…

 

4 கிராம வங்கிகளை பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு…

இந்த ஆண்டில், 3 அல்லது 4 மண்டல கிராம வங்கிகளை (ஆர்.ஆர்.பி.) பங்குச் சந்தைகளில் பட்டியலிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1976ம் ஆண்டு ஆர்.ஆர்.பி. சட்டத்தின்கீழ், மண்டல கிராம வங்கிகள் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில், சிறுவிவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கலைஞர்களுக்கு கடன் மற்றும் இதர சேவைகள் வழங்குவதற்காக இந்த மண்டல கிராம வங்கிகள் தொடங்கப்பட்டது. இந்த வங்கிகளில் மத்திய அரசு (50 சதவீதம்), ஆதரவு வங்கிகள் (35 சதவீதம்) மற்றும் மாநில அரசுகள் (15 சதவீதம்) பங்கினை கொண்டுள்ளன. தற்போது 45 ஆர்.ஆர்.பி. வங்கிகள் உள்ளன.

வேளாண் தொழிலாளர்கள்

தற்போது ஆர்.ஆர்.பி. வங்கிகளின் எண்ணிக்கையை 38ஆக குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. செலவினத்தை குறைக்கவும், தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தவும், மூலதன அடிப்படை உயர்த்தவும், அதிக இடங்களில் கிளைகள் மற்றும் கடன் வழங்குவதை அதிகரிக்கும் நோக்கில் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மண்டல கிராம வங்கி கிளை

பெரிய நிறுவனமாக உருவாக்கும் நோக்கில் கடந்த சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் 21 மண்டல கிராம வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு  இந்த  ஆண்டில் 3 அல்லது 4 மண்டல கிராம வங்கிகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.