4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு!

 

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு!

தமிழக காவல்துறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஆண்டுதோறும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கைவிடுத்திருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதையடுத்து தலைமைச் செயலர் சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர் அடங்கிய குழு, பதவி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியது

PROMOTION COPY

இதைதொடர்ந்து தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் 8 டிஐஜிக்களுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கியுள்ளது. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ற்போது பணியில் ஐ.ஜி., அந்தஸ்தில் இருக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம், சந்திப் மிட்டல், பாலநாகதேவி மற்றும் சேசசாயி ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., அந்தஸ்து வழங்கப்படுகிறது.  ஐ.பி.எஸ். அதிகாரிகள் சரவணன், பிரவேஷ்குமார், சேவியர் தனராஜ், பிரபாகரன், அனில்குமார் கிரி, கயல்விழி, சின்னசுவாமி ஆகியோர் டி.ஐ.ஜி.க்களாகவும், கபில்குமார், கண்ணன், லோகநாதன், சந்தோஷ்குமார், தேன்மொழி, ஜோஷி நிர்மல்குமார், கார்த்திகேயன் மற்றும் கே.பாவனீஸ்வரி ஆகியோர் ஐ.ஜி.யாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.விரைவில் பதவி உயர்வு வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, புதிய பணியிடங்கள் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.