4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன டூவிலர்! ஹெல்மெட் போடவில்லை என வீட்டுக்கு அனுப்பப்பட்ட அபராத நோட்டீஸ்

4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன டூவிலர்! ஹெல்மெட் போடவில்லை என வீட்டுக்கு அனுப்பப்பட்ட அபராத நோட்டீஸ்

உத்திர பிரதேசத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இருசக்கர வாகனத்திற்கு, ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்துத் துறையினரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹாசியபாத்தை சேர்ந்தவர் பிரதீப் ராய் வீட்டிற்கு திடீரென அபராத நோட்டீஸ் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கியதற்காக ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் இருந்தது. 

Helmet

இதுகுறித்து தெரிவித்துள்ள பிரதீப், “ கடந்த 2015 ஆம் ஆண்டு எனது மகனை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றேன்.  வாகனத்தை நிறுத்திவிட்டு மகனை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது, இருசக்கர வாகனத்தை யாரோ திருடிவிட்டார்கள். இதுகுறித்து துள்சி நிகேடன் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் என் புகார் தொடர்பாக விசாரணை நடத்தவில்லை. இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது புதிய வாகனமும் வாங்கிவிட்டேன்.  இப்படி இருக்கும்போது தற்போது அந்த காணாமல்போன வாகனத்தின் பதிவெண்ணை குறிப்பிட்டு, ஹெல்மெட் அணியாமல் போனதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என செலான் அனுப்பப்பட்டுள்ளது. காணாமல் போன எனது இருசக்கர வாகனம் 4 ஆண்டுகளாக இந்த பகுதியில் தான் பயன்பாட்டில் உள்ளது.  ஆனால் இதை கண்டுபிடிக்காத காவல் துறையினர், எனக்கு தவறான நோட்டீசை அனுப்பியுள்ளனர்” எனக்கூறினார்.