4வது டெஸ்ட் போட்டி: ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டம்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

 

4வது டெஸ்ட் போட்டி: ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டம்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும்ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

 

இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 69 ரன்களும், ஜோ ரூட் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதி உள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.