4வது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

 

4வது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீவு செய்தது

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீவு செய்தது.

nz

இந்திய அணி ஏற்கனவே டி20 தொடரை வென்றதால், ரோகித் சர்மா, சமி மற்றும் ஜடேஜா ஆகிய மூவருக்கும் இன்றைய போட்டியிவ் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்திய துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களம் கண்டனர். ராகுல் 39 ரன்களுக்கும், சாம்சன் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கோஹ்லியும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா தடுமாற்றம் கண்டது.

kohli

இறுதியில், மனிஷ் பாண்டே அரைசதம் அடிக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. 

அடுத்ததாக, சற்று எளிதான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முன்றோ மற்றும் சைப்பர்ட் இருவரும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழக்காமல் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

munro

இதில் முன்றோ 64 ரன்களுக்கும், சைப்பர்ட் 57 ரன்களுக்கும் வெளியேற இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை வந்தது. 20வது ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவை என இருந்தது.

thakur

தாக்கூர் பந்துவீச வந்தார். 2 ரன் அவுட், 2 கேட்ச் என 4 விக்கெடுகளை ஒரே ஓவரில் நியூசிலாந்து அணி இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அணி சார்பில் பும்ராஹ் பந்துவீசினார். இவர் 6 பந்துகளில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்திய அணி சார்பில் கேஎல் ராகுல் மற்றும் கோஹ்லி ஆட வந்தனர். கேஎல் ராகுல் முதல் இரண்டு பந்துகளில் 6 மற்றும் 4 ரன்கள் அடித்து 3 வது பந்தில் வெளியேறினார்.

virat

கடைசியாக, விராட் கோஹ்லி பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்று தந்தார். 

இந்தியா 4-0 என இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.