4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

 

4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

நாடு முழுக்க தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது நாளை (ஞாயிறு) நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில், 4ம் கட்ட ஊரடங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறிவிட்டார்.

4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாடு முழுக்க தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது நாளை (ஞாயிறு) நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில், 4ம் கட்ட ஊரடங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். ஆனால், வேறு வடிவில் ஊரடங்கு இருக்கும் என்று கூறியதால், பல்வேறு தளர்வுகளோடு 4ம் கட்ட ஊரடங்கு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

modi-78

தொடக்கத்தில் ஊரடங்கு பற்றிய அறிவிப்பை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் மோடி. ஆனால், ஊரடங்கை அறிவித்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை காரணமாக 3வது ஊரடங்கு பற்றிய அறிவிப்பை மோடி வெளியிடவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமே அறிவித்தது. இன்றும் மத்திய உள்துறை அமைச்சகமே அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிரா, தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.