Home அரசியல் 4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? - இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்? – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

நாடு முழுக்க தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது நாளை (ஞாயிறு) நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில், 4ம் கட்ட ஊரடங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறிவிட்டார்.

4ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாடு முழுக்க தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது நாளை (ஞாயிறு) நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில், 4ம் கட்ட ஊரடங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். ஆனால், வேறு வடிவில் ஊரடங்கு இருக்கும் என்று கூறியதால், பல்வேறு தளர்வுகளோடு 4ம் கட்ட ஊரடங்கு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

modi-78

தொடக்கத்தில் ஊரடங்கு பற்றிய அறிவிப்பை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் மோடி. ஆனால், ஊரடங்கை அறிவித்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை காரணமாக 3வது ஊரடங்கு பற்றிய அறிவிப்பை மோடி வெளியிடவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமே அறிவித்தது. இன்றும் மத்திய உள்துறை அமைச்சகமே அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிரா, தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் : மருத்துவமனை தகவல்!

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நலக் குறைவு...

“ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் பாலியல் குற்றம் இல்லை” – மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

சிறுமியின் ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் குற்றவாளியை போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது என்றும், அதனை பாலியல் தாக்குதலாக கருத்தில் கொள்ள முடியாது எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர்...

“போனை எடுத்ததுக்காக போட்டு தள்ளிட்டியே” -ஒரு தந்தைக்கு மகளால் நேர்ந்த நிலை

தன்னுடைய போனை ஒளித்து வைத்த தந்தையை அடித்து கொன்ற ஒரு மகளை போலீசார் கைது செய்தார்கள்

கும்பகோணம் அருகே காதல்ஜோடி தற்கொலை… பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு…

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தூக்கிட்டும், காதலி விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!