3வது டோஸ் மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா?

3வது டோஸ் மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா?

மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்குமா? என்கிற ஆய்வை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது பாரத் பயோடெக் நிறுவனம்.

3வது டோஸ் மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா?

கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் வேகம் எடுத்து வரும் நிலையில் தடுப்பூசியும் வேகமாக செலுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கோவாக்சிங், கோவிஷீல்டு என்கிற இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

3வது டோஸ் மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா?

முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி 81 சதவிகித சிறப்பான செயல்திறன் கொண்டதாக ஏற்கனவே நடந்த சோதனையின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.

3வது டோஸ் மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா?

இந்த நிலையில் மருந்தின் செயல் திறனை மேலும் அதிகரிக்க தேவையான ஆய்வுகளை மத்திய அரசின் அனுமதியோடு பாரத் பயோடெக் நிறுவனம் துவங்கியிருக்கிறது. மூன்றாம் கட்ட சோதனையில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்புமருந்து சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களைக் கொண்டே மூன்றாவது ரோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா என கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது
.