3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் அவதி

3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் அவதி

ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் 3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் அவதி

ஈரோடு வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொது கலந்தாய்வு நடத்த கோரி 16ம் தேதியிலிருந்து ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் அவதி

ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட138 கிராம நிர்வாக அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 -வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்; பொதுமக்கள் அவதி

கிராம நிர்வாக அலுவலர்கலின் மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் காரணமாக பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், போலீஸ் துறை சம்பந்தமான பணிகள் வருமானச் சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் போலீஸ் சம்பந்தமான பணிகளும் தேக்கம் அடைந்துள்ளன.