“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கொரோனா முதல் அலையில் அதிகப்படியான முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா தடுப்பூசி வந்த பிறகு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. முதியவர்களில் பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி செலுத்தியதாலும், அவர்கள் வீட்டிலேலேயே இருப்பதாலும் தற்போதைய இரண்டாம் அலையால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பில்லை. ஆனால் இரண்டாம் அலையில் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை உக்கிரமாக இருந்தது.

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

இதனால் ஆக்சிஜன், மருந்துகள், படுக்கை வசதி பற்றாக்குறை என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கும்போதே இந்தியாவில் மூன்றாம் அலை வருவதைத் தவிர்க்க முடியாது என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கூறியிருந்தார். இதனிடையே மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் இரண்டாம் அலை வந்தததற்கான ஆரம்ப அறிகுறி மகாராஷ்டிராவில் தான் தென்பட்டது. தற்போது அங்கு முழுவதுமாக குறைந்துள்ளது. ஆனால் மூன்றாம் அலைக்கான அறிகுறியும் அங்கே தான் தென்பட்டிருக்கிறது. திடீரென்று 8 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உஷாராக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இப்போது தமிழ்நாடு அரசும் அதே உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

அதில், “கொரோனா மூன்றாம் அலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்திப்பார்கள் என வல்லுநர்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வலம் வருகின்றன. தமிழ்நாட்டையும் கொரோனா மூன்றாம் அலை தாக்கலாம் என்பதால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1.வருங்காலத்தில் கொரோனா மூன்றாம் அலை வரும் பட்சத்தில் குழந்தைகள்நல மருத்துவர்களை ஸ்பெஷலாக நியமித்திருக்க வேண்டும்.

2.ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தது 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோல குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவும் தயாராக இருக்க வேண்டும்.

“எந்த நேரமும் 3ஆம் அலை குழந்தைகளை தாக்கலாம்; தயாராக இருங்கள்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

3.குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

4.குழந்தைகள் பிரிவில் 4ல் 1 பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திட வேண்டும்

5.பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் மூன்றாம் அலைக்கு தயார்ப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.