நடராஜனுக்கு இடம் இல்லை – 3-ம் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு #IndVsAus

 

நடராஜனுக்கு இடம் இல்லை – 3-ம் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு #IndVsAus

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் போட்டியை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்தியாவும் வென்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி தோற்றது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றிக்கு ஒரே காரணம், கேப்டன் ரஹானே என்று அடித்துச் சொல்லலாம். கேப்டன் ரஹானே தன் பொறுப்புணர்ந்து சவாலன தம் பணியை எந்தக் குறையும் இல்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக, சிராஜ் மற்றும் அஸ்வினை சூழலுக்கு ஏற்ப பந்து வீச அழைத்த வியூகத்தைச் சொல்லலாம்.

நடராஜனுக்கு இடம் இல்லை – 3-ம் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு #IndVsAus

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் பவுலர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். அடுத்த போட்டியில் அவரால் ஆட முடியாத நிலை. அதனால், அவர் விலக்கப்பட்டு தமிழகத்தின் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

நாளை தொடங்கும் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் நடராஜன் நிச்சயம் ஆடுவார் என்று பலரும் எதிர்பார்த்துகொண்டிருந்தனர். பிசிசிஐ யின் ட்விட்டர் பக்கத்திற்குச் சென்றுகூட சில ரசிகர்கள் நடராஜனைச் சேர்க்கக் கோரி கமெண்ட் செய்தனர். ஆனால், நடந்ததோ வேறு.

தற்போது பிசிசிஐ மூன்றாம் டெஸ்ட் போட்டியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துரதிஷ்டவசமாக அதில் தமிழகத்தின் நடராஜன் பெயர் இல்லை. இது தமிழக ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

நடராஜனுக்கு இடம் இல்லை – 3-ம் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு #IndVsAus

அணியில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். ரஹானேதான் கேப்டன். துணை கேப்டன் ரோஹித் ஷர்மா. சுப்னம் கில் இடம்பெற்றிருக்கிறார். அநேகமாக ரோஹித் ஷர்மாவும், கில்லும் ஓப்பனிங் இறங்குவார்கள்.

அடுத்து புஜாரா, விஹாரி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி. இவர்களில் சைனிக்கு நாளைய போட்டிதான் அறிமுகப் போட்டி.

நடராஜன் அணிக்குள் இல்லாதது பெரும் வருத்தம்தான். ஆனாலும், மூன்றாம் டெஸ்ட்டில் இந்தியா வென்று தொடரில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். வெல்லுமா இந்திய அணி?