• August
    24
    Saturday

Main Area

Main



3வது ஒருநாள் போட்டி: முதலில் பேட்டிங் செய்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி!!

இந்திய அணி,மேற்கிந்திய தீவு
இந்திய அணி,மேற்கிந்திய தீவு
Loading...

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் இன்று  நடைபெறுகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

ind vs wi

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய போட்டியில் இருந்து இரண்டு மாற்றங்களை செய்து களமிறங்குகிறது. அதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கிமோ பால் உள்ள எடுத்துவரப்பட்டுள்ளார். இரண்டாவதாக, வேகப்பந்துவீச்சாளர் ஒஷேன் தாமஸ் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக சுழல்பந்து வீச்சாளர் பாபியன் ஆலன் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்திய அணி முந்தைய போட்டியில் இருந்து ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்திருக்கிறது. அதில் சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ்விற்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யூசுவேந்திர சஹால் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார்.

ind vs wi

இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணியின் 11 வீரர்கள்:

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, கலீல் அகமது, யூசுவேந்திர சஹால்.

இன்றைய போட்டியில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணியின் 11 வீரர்கள்:

கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், கீமோ பால், பாபியன் ஆலன்.

2018 TopTamilNews. All rights reserved.