ராமநாதபுரம்: இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு பதுக்கல் – 3 பேர் கைது

 

ராமநாதபுரம்: இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு பதுக்கல் – 3 பேர் கைது

ராமநாதபுரம் அருகே இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ராமநாதபுரம்: இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு பதுக்கல் – 3 பேர் கைது


ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் அவரது நண்பர் விக்கி. கடந்த 2018ஆம் ஆண்டு கொலை வழக்கு தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிய இருவரையும், ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்துள்ளனர்.

இந்நிகழ்வின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வருவதையொட்டி பழிக்குப் பழிவாங்கும் விதமாக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராமநாதபுரம் டிஎஸ்பி., வெள்ளைத்துரை தலைமையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் துணையுடன் வாலாந்தரவை விரைந்தனர்.

ராமநாதபுரம்: இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு பதுக்கல் – 3 பேர் கைது

அப்போது, ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் என்பவர் தோப்பில் பதுக்கிவைத்திருந்த 2 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கார்த்தியின் சாகோதரர் தர்மராஜ் (37), மற்றொரு தரப்பை சேர்ந்த பூமிநாதன் (42), சுரேஷ் (33) ஆகியோரை கைதுசெய்தனர். வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, இரட்டைக்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தர்மராஜ், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.