பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

ஆபாச படங்களை எடுத்து மிரட்டி வந்த இந்த கும்பல் இந்த பெண்களை வைத்து சில தொழிலதிபர்களையும் வலையில் வீழ்த்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் பெண்கள், கணவனை இழந்தவர்கள் போன்ற பெண்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்றுள்ளனர். மேலும் இவர்களின் ஆபாச படங்களை எடுத்து மிரட்டி வந்த இந்த கும்பல் இந்த பெண்களை வைத்து சில தொழிலதிபர்களையும் வலையில் வீழ்த்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சில பெண்கள் போலீசில் புகார் கொடுக்க, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் லோகநாதன் மட்டுமல்ல அவரின் மனைவி, தந்தை உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது தெரியவந்தது. தற்போது லோகநாதனின் தந்தை ரகுவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் லோகநாதனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். பெண்களையும் தொழிலதிபர்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்த செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இதில் வேறு யார் யார் சம்மந்தப்பட்டு உள்ளார்கள் என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதுவரை இந்த கும்பலால் 6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சேலம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...