கொரோனா கொடுங்காலத்தால வேலை போச்சு; வருமானம் இல்லை..3 குழந்தைகளுக்கு அப்பா எடுத்த முடிவு

 

கொரோனா கொடுங்காலத்தால வேலை போச்சு; வருமானம் இல்லை..3 குழந்தைகளுக்கு அப்பா எடுத்த முடிவு

கொரோனாவினால் உயிரிழப்புகள் மட்டும் இல்லாமல் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால்தான் ‘கொரோனா கொடுங்காலம்’ என்றே சொல்லி வருகின்றனர். பல ஆண்டுகளாக செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள் இந்த கொடுங்காலத்தில்.

வேலை இழந்து தவிப்பவர்கள், சம்பளம் சரிவர கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் பலரும் புதுத்தொழிலுக்கு மாறி பிழைத்து வருகின்றனர். அப்படியும் பிழைக்க வழி இல்லாதவர்கள் புதுத்தொழிலால திருட்டுத்தொழிலுக்கு மாறிவிடுவதான் ஆபத்தாகவும், அதே நேரம் வேதனையாகவும் இருக்கிறது.

கொரோனா கொடுங்காலத்தால வேலை போச்சு; வருமானம் இல்லை..3 குழந்தைகளுக்கு அப்பா எடுத்த முடிவு

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தை சேர்ந்தவர் சல்மான். இவர், ஏசி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக பெரம்பூர் சென்றிருக்கிறார். அவரது வீட்டில் தாய், தந்தை மட்டுமே இருந்துள்ளனர். வீட்டின் பின்பக்க கதவும் திறந்து கிடந்திருக்கிறது. சைக்கிளில் சுற்றிக்கொண்டே இதை நோட்டமிட்ட நபர், திடீரென்று வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு ஓடிவிட்டார்.


வீட்டிற்குள் இருந்த சல்மானின் பெற்றோர் சத்தம் கேட்டு வந்து பார்த்ததும் பீரோ உடைந்து கிடைந்ததது. அவர்கள் உடனே சல்மானுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர் கண்ணகி நகர் போலீசுக்கு தகவல் சொல்லி, போலீசார் வந்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் சைக்கிளில் வந்த அந்த இளைஞர் கண்ணகி நகரை சேர்ந்த பெயிண்டர் ஜெரால்டுஎன்று தெரியவந்தது.
விசாரணையில் , கொரோனாவால் வேலை இல்லை. மூன்று குழந்தைகளை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியவில்லை. இது தவறு என்று தெரிந்தும் திருட்டில் இறங்கிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் ஜெரால்டு.