3D பாம்புடன் வந்த சிறுவன் ! விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு !

 

3D பாம்புடன் வந்த சிறுவன் ! விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு !

நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ், அவரது மனைவி மற்றும் இவரது 10 வயது மகன் ஸ்டீவ் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர். 
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உடமைகள் அனைத்தும் சோதனை செய்து விட்டு விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர். பின்னர் உள்ளே நுழைந்தபோது விமானத்திற்கு அருகில் இருந்த அதிகாரிகள் சிறுவன் ஸ்டீவ்வை பயணம் செல்ல அனுமதிக்க முடியாது என கூறினார். அதற்கு ஏன் என தந்தை கேட்க, சிறுவனின் டீஷர்ட்டையில் நிஜமாகவே இருப்பதுபோல் பாம்பு ஓவியம் வரையப்பட்டுள்ளது

நியூசிலாந்தில் பாம்பு ஓவியம் 3D-யில் வரையப்பட்ட டீஷர்ட்டை அணிந்து வந்த சிறுவனை விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ், அவரது மனைவி மற்றும் இவரது 10 வயது மகன் ஸ்டீவ் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர். 

snake-tshirt

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உடமைகள் அனைத்தும் சோதனை செய்து விட்டு விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர். பின்னர் உள்ளே நுழைந்தபோது விமானத்திற்கு அருகில் இருந்த அதிகாரிகள் சிறுவன் ஸ்டீவ்வை பயணம் செல்ல அனுமதிக்க முடியாது என கூறினார். அதற்கு ஏன் என தந்தை கேட்க, சிறுவனின் டீஷர்ட்டையில் நிஜமாகவே இருப்பதுபோல் பாம்பு ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிறத்தில் பாம்பு இருப்பது போன்ற ஓவியம் இருந்தால், விமானத்தில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். மேலும் இதை பார்க்கும்போது பயணிகளுக்கு பயம் ஏற்படும் என கூறி தடுத்து நிறுத்தினர். பின்னர் ஸ்டீவ் தனது டீஷர்ட்டை மாற்றிப் போடுமாறு அறிவுறுத்தியதை அடுத்து சிறுவனும் டீஷர்ட்டை மாற்றிப் போட்டுக்கொண்டான். இதனால் வெளியில் தெரிந்த பாம்பு சிறுவனின் மார்போடு ஒட்டிக்கொண்டது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை தென் ஆப்பிரிக்கா வந்தவுடன் விமான நிறுவனத்திற்கு  மெயில் அனுப்பினார். இதற்கு பதிலளித்த விமானத்தின் நிர்வாகம்  இது தொடர்பாக அதிகாரிடம் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம் விரைவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.