3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, ராமநாதபுரம் , தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் ,நாகை ,தஞ்சை ,மதுரை, தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரியின் காரைக்காலிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நெற்றி அறிவித்த நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. நாகை, ஈச்சன் விடுதியில், தலா 9 சென்டிமீட்டர் ,ராமநாதபுரம் 8 ,மண்டபம், திருத்துறைப்பூண்டி, பாபநாசத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.