பிடிகொடுக்காத பாஜக.. மீண்டும் 3வது அணி அமைக்க முயற்சியா?

 

பிடிகொடுக்காத பாஜக.. மீண்டும் 3வது அணி அமைக்க முயற்சியா?

மூன்றாவது அணி கனவில்தான் பாஜக இப்போதும் இருப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரிதான் முருகன் பேச்சும் இருக்கிறது.

சென்னையில் நடந்த அரசு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொன்னாலும், கூட்டணி பற்றி அமித்ஷா நழுவித்தான் சென்றார். அதன்பின்னர் நடந்த பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கூட்டணி பற்றி முருகனுடன் பேசி முடிவெடுத்துக்கொள்கிறேன். அதனால் நீங்கள் யாரும் கூட்டணி பற்றி பேச வேண்டாம் என்று மா.செக்களை கேட்டுக்கொண்டிருகிறார் அமித்ஷா.

பிடிகொடுக்காத பாஜக.. மீண்டும் 3வது அணி அமைக்க முயற்சியா?

ஈபிஎஸ், ஓபிஎஸ் பேசியதை வைத்து அதிமுகவுடனான கூட்டணி முடிவாகிட்டது என்று பாஜகவினரும் நினைத்திருக்க, முருகனுடன் பேசி முடிவெடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் குழம்பித்தான் போய்விட்டார்கள். அப்படியானால் இன்னமும் மூன்றாவது அணி முடிவில்தான் இருக்கிறோமா என்ற குழப்பமும் கட்சி்யினரிடையே இருக்கிறது. பாமக, தேமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ரஜினியையும் இணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை பாஜக மீண்டும் கையில் எடுத்திருப்பதாகவே சொல்கிறார்கள் பாஜகவினர்.

இந்நிலையில், கூட்டணி குறித்து மேலிடத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. ஆலோசனைக்கு பின்னர் கூட்டணி தொடர்பாக தலைமை அறிவிக்கும் என்று சொல்லி வருகிறார் தமிழக பாஜக தலைவர் முருகன்.

பிடிகொடுக்காத பாஜக.. மீண்டும் 3வது அணி அமைக்க முயற்சியா?

கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக வெளிப்படையாக அறிவித்துவிட்ட பின்னரும் கூட, பாஜக இன்னமும் தயக்கம் காட்டி வருவது ஏன்?

அதிமுக – பாஜக கூட்டணி முடிவாகிவிட்டது தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைதான் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கூட்டணியே இன்னும் முடிவாகவில்லை என்பது, மீண்டும் மூன்றாவது அணி முடிவுக்கே தாவும் மனநிலையில் இருக்கிறதா பாஜக என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரம், அதிக தொகுதிகளை வளைத்துப் போடுவதற்காகத்தான் அதிமுகவிடம் பிடிகொடுக்காமல் இருக்கிறது பாஜக என்றும் பேசி வருகிறார்கள்.