”ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவை அறிமுகம்”-ரூ. 399 முதல் கட்டண திட்டம் தொடக்கம்

 

”ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவை அறிமுகம்”-ரூ. 399 முதல் கட்டண திட்டம் தொடக்கம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், போஸ்ட்பெய்ட் பிளஸ் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி, அதில் சில சிறப்பான கட்டண திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த சேவையின் கீழ் மாதாந்திர கட்டண திட்டங்கள் 399 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 399 ரூபாய்க்கு 75 ஜிபி டேட்டா, அளவற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது.

மேலும் 599 ரூபாய் திட்டத்தில், 100 ஜிபி டேட்டா மற்றும் மேற்சொன்ன அதே இதர பயன்களுடன், குடும்ப திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு சிம் கார்டு இணைத்துக்கொள்ளலாம் என தெரிகிறது. இதேப்போல 799 ரூபாய் திட்டத்தின் கீழ் 150 ஜிபி டேட்டா மற்றும் இதர மேற்சொன்ன பயன்களுடன், கூடுதலாக இரண்டு சிம் கார்டுகள் இணைத்துக்கொள்ளும் வசதியும், 999 ரூபாய் திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவுடன், அனைத்து பயன்கள் மற்றும் கூடுதலாக 3 சிம்கார்டு இணைக்கும் வசதியும் கிடைக்கும் என தெரிகிறது. இதில் முதல் இரண்டு திட்டங்களில் 200 ஜிபி டேட்டா வரை அடுத்த மாதத்திற்கு ரோல் ஒவர் செய்துகொள்ளலாம் என்றும் 999 ரூபாய் திட்டத்தில் 500 ஜிபி வரை ரோல் ஒவர் செய்துகொள்ளலாம் என தெரிகிறது.

இதைத்தவிர, 1499 ரூபாய் திட்டத்தில் 300 ஜிபி டேட்டா மற்றும் 500 ஜிபி ரோல் ஒவருடன், அனைத்து பயன்களும் கிடைப்பதுடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமீரகத்தில் இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான சிம்கார்டுகள் வரும் 24ம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்