7.5% உள் ஒதுக்கீடு: 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம்!

7.5% உள் ஒதுக்கீடு: 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம்!

உள் ஒதுக்கீட்டின் மூலமாக 395 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

7.5% உள் ஒதுக்கீடு: 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம்!

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 12ம் தேதி (இன்றுடன்) நிறைவடைகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வரும் 18 அல்லது 19ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

7.5% உள் ஒதுக்கீடு: 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம்!

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலமாக 395 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது, எம்பிபிஎஸ்சில் 304 இடங்களும், பிடிஎஸ்சில் 91 இடங்களும் கிடைக்கும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவைகள் 8 நிமிடத்திற்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் இதுவரை 34,424 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.