‘பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து’..39 பேர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!

‘பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து’..39 பேர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து’..39 பேர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!

சித்தி மாவட்டத்தில் இருந்து சத்னா பகுதியை நோக்கி 54 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 7.30 மணிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், கிரேன் உதவியுடன் பேருந்தை கால்வாயில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

‘பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து’..39 பேர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!

இதனிடையே, பன்சாகர் அணையில் இருந்து கால்வாய்க்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியை தொடர்ந்த வீரர்கள், இதுவரை 35 சடலங்களை கால்வாய்க்குள் இருந்து வெளியே எடுத்துள்ளனர். மீட்புப் பணி முடிந்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

‘பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து’..39 பேர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சுயா வேலி பகுதி வழியாக செல்லவிருந்த இந்த பேருந்தை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ராம்பூர் வழியாக ஓட்டுநர் இயக்கியது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போக்குவரத்து துறை அமைச்சர் சிங் ராஜ்புத்தை தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.