கொரோனாவால் 38 கர்ப்பிணிகள் பரிதாப பலி

 

கொரோனாவால் 38 கர்ப்பிணிகள் பரிதாப பலி

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 64 கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிரவைக்கிறது.

கொரோனாவால் 38 கர்ப்பிணிகள் பரிதாப பலி

கொரோனா முதல் அலையில் சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் 800 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் 5 கர்ப்பிணிகள் மட்டுமே உயிரிழந்தனர். அதிலும் மூன்று பெண்களுக்கு இதய நோய்கள் இருந்துள்ளன. நேரடி கொரோனா மரணம் என்பது இரண்டு பெண்கள் மட்டுமே. ஆனால், கொரோனா இரண்டாவது அலையில் 200 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் 5 கர்ப்பிணிகளும், மே மாதத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாம் அலையில் வீரியம் அதிகம் என்பதால்தான் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால்தான், குடும்பத்தில் யாருக்கேனும் தொற்று இருந்த அங்கே கர்ப்பிணிகளை வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முதல் அலையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு அரிதாகவே இருந்த நிலையில் இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு ரொம்ப சாதாரணமாகிவிட்டது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பிணிகளுக்கு கொரொனா தடுப்பூசி போடாததற்கும் இந்த இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம் என்பதால், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடலாம் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.