கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

 

கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடுகிறது. முதல் அலை வயதானவர்களையும் குழந்தைகளையுமே அதிகமாக தாக்கிய நிலையில் இரண்டாம் அலை பாரபட்சமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்படையச் செய்கிறது. அதிகளவில் இளைஞர்களை உயிரிழப்பதாக அண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணிப் பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

அதாவது, கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினர். கொரோனா வைரஸில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பது தான் கர்ப்பிணிகள் அதிகமாக பாதிக்கப்படுவதன் முக்கிய காரணம். இதனால், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அறையில் இதுவரை 38 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு பொதுவாக அறிகுறி இல்லாமலேயே தொற்று ஏற்படுவதாகவும் 5 முதல் 8 மாத கர்ப்பிணிகளை கொரோனா அதிகளவில் தாக்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 25 வயதுக்கு குறைவான பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப்போடவும் கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.