சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்கள் பிளாஸ்மா தானம்!

 

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒரு நோயாளியின் ரத்தத்தை எடுத்து மற்றொரு நோயாளிக்கு செலுத்தும் முறையே பிளாஸ்மா தானம் என சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் அந்த ரத்ததில் இருக்கும் ரத்த அணுக்கள், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து கொரோனாவில் இருந்து விரைவில் குணமடையச் செய்கிறது. அதனால் தமிழகத்திலும் இந்த முறையை பின்பற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி வழங்கியது. அதன் படி தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியும் அமைச்சர் விஜயபாஸ்கரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்கள் பிளாஸ்மா தானம்!

அவர்களது கோரிக்கைக்கு இணங்க, கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு சிலர் பிளாஸ்மா தானம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட 38 காவலர்கள் சென்னையில் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனாவால் தாக்கப்பட்ட காவலர்கள் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுள் 38 பேர் நேற்று குணமடைந்ததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.