முதல்வர் நிகழ்ச்சியில் வழங்கிய உணவை உண்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

முதல்வர் நிகழ்ச்சியில் வழங்கிய உணவை உண்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் போன்ற காரணங்களால் 38 பேர் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நேற்று வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கலப்பநாயக்கன்பட்டி, மேலகலம், உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வேன் மூலமாக பொதுமக்களை அதிமுக தொண்டர்கள் அழைத்து வந்தனர். நிகழ்ச்சி முடிவில் அவர்களுக்கு ஒரு துணிப்பையில் எலுமிச்சை சாதம், புளி சாதம், முட்டை மற்றும் ஒரு பாட்டில் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன, அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொதுமக்கள் இரவில் உணவருந்திவிட்டு துவங்கியுள்ளனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் வழங்கிய உணவை உண்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் அந்த உணவை உண்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 38 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டதையடுத்து திருநள்ளாறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு ட்ரிப்ஸ் போடப்பட்டு, ரத்த அளவு, சர்க்கரையின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் உணவு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இலுப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்