முதல்வர் தொடங்கிவைக்கும் மூன்று நாள் மெய்நிகர் மாநாடு: 38 நாடுகளைச்சேர்ந்த 10 ஆயிரம் தொழில் முனைவோர்கள் பங்கேற்பு

 

முதல்வர் தொடங்கிவைக்கும் மூன்று நாள் மெய்நிகர் மாநாடு:  38 நாடுகளைச்சேர்ந்த 10 ஆயிரம்  தொழில் முனைவோர்கள் பங்கேற்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறு தினம் 29.10.2020 அன்று மூன்று நாள் மெய்நிகர் மாநாட்டினை தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த இந்த மாநாட்டில் 38 நாடுகளைச்சேர்ந்த 10 ஆயிரம் தொழில்முனைவோர்கள் பங்கேற்கிறார்கள்.

வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பதற்காக கடந்த 2019ம் ஆண்டில் ‘ யாதும் ஊரே’ என்ற திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரில் சென்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். உலகெங்கிலும் வாழும் தமிழ் தொழில் அதிபர்களை ஒன்றிணைத்து தொழில் தொடங்குவதற்காக ஒரு உறவுப்பாலமாக ‘யாதும் ஊரே’ திட்டம் அமைந்தது.

முதல்வர் தொடங்கிவைக்கும் மூன்று நாள் மெய்நிகர் மாநாடு:  38 நாடுகளைச்சேர்ந்த 10 ஆயிரம்  தொழில் முனைவோர்கள் பங்கேற்பு

இந்த திட்டத்தின் படி உலகத்தமிழர்கள் பலரும் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். அதனால் இதுகுறித்த கருத்தரங்க மாநாடு ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. காணொளி காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநாட்டினை தொடங்கி வைக்கிறார். நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாள் இந்த மாநாடு நடைபெறுகிறது. 38 நாடுகளில் உள்ள 10 ஆயிரம் தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டின் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசுடன் தென்னிந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் இணைந்து இந்த கருத்தரங்க மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. தொழில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், கல்வியாளர்கள், அரசுத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் கருத்தரங்கில் பங்கேற்க விருக்கிறார்கள்.

இது குறித்து தென்னிந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஆர்.எம்.அருண், 3டி கண்காட்சி மூலம் நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டு புதிய தொழில் திட்டம் தொடங்கவும், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வழிகாட்டுதல்களை பெறுவர் என்றூ இந்த மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் முதல் 10 ஆயிரம் பிரதிநிதிகள் வரை பங்கேற்க விருக்கிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டினை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.