மூன்றாவது அலையில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும்!நிபுணர்கள் எச்சரிக்கை

மூன்றாவது அலையில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு  நோய் தொற்று ஏற்படும்!நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மூன்றாவது அலையில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு  நோய் தொற்று ஏற்படும்!நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று எச்சரித்திருக்கிறார் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன். இந்த மூன்றாவது அலை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மருத்துவ நிபுணர்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறிவருகின்றனர். அதன்படி 3வது அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் படி, கொரோனா மூன்றாவது அலை வீசினால் டெல்லியில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார் முதல்வர் கெஜ்ரிவால்.

மூன்றாவது அலையில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு  நோய் தொற்று ஏற்படும்!நிபுணர்கள் எச்சரிக்கை

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருவதால், அதற்காக சிறப்பு நடவடிக்கை குழுவை தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மூன்றாவது அலையில் தினமும் 37 ஆயிரம் பேருக்கு  நோய் தொற்று ஏற்படும்!நிபுணர்கள் எச்சரிக்கை

தற்போது ஆக்சிஜன் இருப்பும், மருந்துகளின் இருப்பும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் கெஜ்ரிவால், டெல்லியில் இரண்டு சிறப்பு மருத்துவமனைகளில் மரபணு மாற்ற வைரஸ்களை கண்டுபிடிப்பதற்கான மரபியல் கூறு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.