பாலாவின் தங்கச்சி ஷிவானியா? என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

 

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

கிரிகாலன் சர்க்கஸ் ரெடியாவது போல, பிக்பாஸ் புது டாஸ்க் ஒண்ணைக் கொடுத்து, ஹவுஸ்மேட்ஸ்களை விளையாடச் சொன்னார். சொன்னாரா… ஆனா, கேரக்டராகவே மாறனேன்னு சிலர் பண்ண கெத்து காட்டலையும், நீ என்ன உறவு முறை சொன்னாலும் நாங்க ஒரு மாதிரி ஃபிக்ஸாகியிருப்பதை எல்லாம் உனக்காக மாத்திக்க முடியாதுனு சிலரும், கேரக்டரை சேஞ்ச் பண்ணிக்கொடுக்க முடியுமானு ஒருத்தரும் என…நடந்த அலப்பறைகள்தான் நேற்றைய எப்பிசோட்.

பிக்பாஸ் 37-ம் நாள்

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

’சண்டைக்கோழி’படத்திலிருந்து பாட்டைப் போட்டு, எல்லோரும் நல்லா சண்டை போடணும்னு சிம்பாலிக்கா சொல்றாராம். வழக்கம்போது வெளியே வந்து ஒரே மூவ்மெண்ட்ஸ் ஆடிட்டு ரெஸ்ட் எடுத்துட்டாங்க.

இவங்களா கண்டண்ட் கொடுக்க மாட்டாங்க… நாமதான் ஏதாச்சும் ட்ரை பண்ணனும்னு ஞானம் வந்த பிக்கி, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ டாஸ்க்கை அறிவித்தார். புத்தம் புது ஈஸ்ட்மெண்ட் டாஸ்க் இல்ல. போன சீசன்கள்ல சொன்னதுல நாலைஞ்ச மிக்ஸ் பண்ணி படிக்க வைத்தார்.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

அர்ச்சனா தாய் கிழவியாம். அவங்கிட்ட சொத்து இருக்குமாம். வாழ்ந்துகெட்ட மகள் சம்யுக்தா. அவர் மகள் அனிதா. சயிண்ட்டிஸ் ரியோ. அவரை காதலிக்கும் இன்னொரு சயிண்ட்ஸ்ட் (அதே லேப்ல) நிஷா. தாய்க் கிழவியின் மகள் சனம். கணவன் ரமேஷ். இவர்களின் பிள்ளைகள் பாலாவும் ஷிவானியும் (அண்ணன் தங்கச்சியாம்) தாய்க்கிழவியின் மூத்த மகன் ஆரி. இவங்க மகன்தான் ஆஜித். அவர் சம்சாரம் சுசித்ரா. நீ சும்மாதானே இருக்க… வா… வந்து சார் போஸ்ட்னு சொல்லுனு கேரக்டர் கொடுப்பாங்களே அதுபோல ஆஜித் கேரக்டர். (ஷிவானிக்கு அத்தை மகன் ஆஜித்). ஆஜித்துக்கு ஷிவானி மீதும், ஷிவானிக்கு ஆஜித் மீது ஒரு லவ்வாம் குறுக்கே நிற்பது அதாவது அண்ணனாக நிற்பது பாலாவாம். சரிதான்.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

இன்னொரு பக்கம் சோம் – மனைவி ரம்யாவாம் (ஓஹோ… ) இவர்களின் மகள் கேபியாம். மூவரும் சேர்ந்து உயிலைத் திருட வேண்டுமாம். அப்பறம் பிக்கி, அந்த வீட்டுக்கு தினமும் வர்ற அணில், காக்கா, குயிலுக்கெல்லாம் ஒவ்வொரு கேரக்டர் கொடுக்க வேண்டியதுதானே…  சரி இவ்வளவு பில்டப் கொடுத்திருக்கீங்க… உருப்படியா… சுவாரஸ்யமா ஏதாச்சும் நடக்குதான்னு பார்ப்போம்.

கிச்சன் ஏரியாவில் சனம் பின்னால் ஒளிஞ்சிட்டு நிஷாகிட்ட பேசிட்டு இருந்தார் ரமேஷ் (கேரக்டராக மாற ட்ரை பண்றாராம்) மூணு பேரும் மாறி பேசிட்டு இருந்தப்ப… ‘இந்தக் கண்றாவி எல்லாம் பார்க்க முடியாது’னு நிஷா சொன்னாங்க. உன்மையில அது ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ் பிக்கி.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

பிக்பாஸ் டாஸ்க்கைப் படிக்கும்போதே அர்ச்சனா, கேரக்டருக்குள் புகுந்தாச்சு. அதனால, நிஷா, சம்யுக்தா மேல அன்பை வாரி வழங்கிட்டு இருந்தாங்க. கலவையான பேச்சாக இருந்தது. ஒண்ணும் புரியல.

பாலாவின் அம்மா ஷனம். ஆனா, ஷனமிடம் பாலா பேசுவதே இல்லை. இதை எல்லோரிடமும் சொல்லி புலம்பிட்டு இருந்தார். பிக்கியிடம் தனியே பேசியே ஆகவேண்டும் என்று அணத்தத்தொடங்கிவிட்டார்.

டைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும்போது கோபி, சோம் மற்றும் ரம்யா குழு வெளியே போய் பீரோவில் உள்ளதை திருடி ஒளிச்சி வைச்சிட்டாங்க. ’உங்க பையன் சாபிட்ட வரமாட்டேங்குறார்’னு ரம்யா சொல்லி வைக்க, ‘சோமு… சோமு.. என்னப்பா ஆச்சு.. ஏன் சாப்பிடல… என்னதான் ஆச்சு’ என பிக்பாஸ் வீட்டு பண்டரிபாயாக மாறிவிட்டார். ‘ஒண்ணுமில்ல.. காலையிலேருந்து பேதியா போவுது’னு சோம்ஸ் சமாளிக்க, ‘என்னதான் சாப்பிட்ட கோபால்’னு அடுத்த விசாரனையை ஆரம்பிச்சார் அர்ச்சனா. நழுவி ஓடிட்டார்.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

இன்னொரு பக்கம், ‘உனக்கு செம்ம கேரக்டர். லாயலா இருக்கணும்’னு ரியோ சொன்னதை வழக்கம்போல தப்பா புரிஞ்சிட்டுகிட்டு, அதுக்கு ஒரு விளக்கம் கொடுக்க ரெடியானார் அனிதா. ’நான் வேற ரமணா’னு ஆட்டையக் கலைச்சார் ரியோ. ஆனா, ‘ விளக்கத்தைக் கூட கேட்கல’னு சண்டையை வேறு பக்கம் திருப்பி நீட்டிக்க, ‘உன் கால்ல வேணா விழுந்துடுறேன்’னு ரியோ சொன்னதும் நிஷாவுக்கு வருத்தமாச்சு. நீ எப்படி அப்படிச் சொல்லலாம்னு அதையே நாலைஞ்சு முறை சொல்லிட்டே இருந்தார் நிஷா. ‘ஏய் விடு… நானே ஒரு தடவைத்தான் சொன்னேன். நீ ஓயாமா சொல்லிட்டு இருக்க’னு விருமாண்டி பசுபதி மோடுக்கு மாறிட்டார்.

சீரியஸாக சமைச்சிட்டு இருந்த சனமிடம், ”குப்பைத் தொட்டியில சோறு கொட்டினது யாரு?’னு ரெண்டு ரூபா கேட்கும் வடிவேலு பாணியில் இயல்பாகத்தான் கேட்டார். ஆனா, ஷனம் இருந்த கடுப்பை ஆரியின் மீது கொட்டத்தொடங்கினார். ‘அந்த சோறை ஒருவேளை நானே கொட்டியிருக்கலாம்’னு வித்தியாசமான பதிலைச் சொன்னதும், அந்தப் பதிலை ஆரி திருக திருக பெரிய சண்டையானது.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

வெளியே அர்ச்சனா அண்ட் டீம் (டாஸ்க் டீம்.. ரியல் டீம் அல்ல) எப்படி உயிலைக் காப்பத்தலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அர்ச்சனாவை மகிழ்வூட்ட நிஷாவின் காமெடி (!)கள் என அதகளமானது. இந்தக் களேபாராத்தில் சோம்ஸ் நைஸாகப் போய் உயிலைத் திருட்டிட்டு போயிட்டார். செம ஆள்தான் போல. அதைப் பத்திரமா கட்டில்ல ஒளிச்சு வெச்சிட்டு திரும்பினா… ‘நான் தட்டுல இருக்கிற சோறைக் குப்பைத் தொட்டியில கொட்டறதை ஏன் உங்ககிட்ட சொல்லணும்’னு ஷனம் கேட்டுட்டு இருந்தாங்க. ஏம்பா… இது என்னிக்கு ஆரம்பிச்ச சண்டை… பானுப்ரியாவும் மம்மூட்டியை ’அழகன்’ படத்துல பேசிக்கிற மாதிரி இருக்கே.

ஒருவழியா அர்ச்சனா உள்ளே வர்ற, ‘அவர் மட்டும்தான் பெர்ஃபெக்டாம்… நாமெல்லாம் இல்லையாம்’னு வண்டியை வேற ரூட்டுக்குத் திருப்ப, ஆரி உஷாராகி தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

ஷிவானிக்கு ஆஜித் மேலேயும் ஆஜித்க்கும் ஷிவானி மேலேயும் ஒரு லவ்வாம். ஷிவானி அண்ணன் பாலா இருப்பதால் பயப்படுவாராம் ஷிவானி. இதுதான் ஸ்கிரிப்ட். ஆனா, ஒரு லவ் இருக்கிற ஆஜித் பக்கம் ஷிவானி நேற்றைய எப்பிசோட்ல திரும்பக்கூட இல்ல. அண்ணன் பாலாஜிகூடத்தான் பிரியாம சுத்திட்டு இருந்தார். ஷிவானியா பர்ஃபாமன்ஸ் பண்ணலனுதான் ஒரு கேரக்டர் கொடுத்திருக்கார் பிக்கி. அதுலேயும் போங்கு காட்டினா எப்படி? நாம் என்ன பண்ணினாலும், சில காரணங்களால் பிக்கி எவிக்‌ஷனிலிருந்து எஸ்கேப் பண்ணிவிட்டுடுவாருனு என்ற நினைப்புதான்.

சரி.. சரி வந்த வேலையைப் பார்ப்போம்னு அர்ச்சனா, ஒவ்வொருத்தரும் ஏன் இந்த உயில் முக்கியம்னு நடிச்சுக்காட்டணும். அதிலேருந்து ஒருத்தரை நான் செலக்ட் பண்ணுவேன். யாரும் குறுக்க பேசக்கூடாது. நானாக செலக்ட் பண்ணின ஆள்தான் இந்த பீரோவைக் காவல் காக்கணும்’னு லென்தியா டயலாக் பேச, ரம்யா, கேபி ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டனர். சரி, எதுக்கும் ஒரு தடவை உயிலைப் பார்த்திடலாம்னு அர்ச்சனா கதவைத் திறந்தா…. திறந்தா… வெறும் காத்து மட்டும்தான் இருந்துச்சு. அதான் ரம்யா குரூப்ஸ் ஆட்டைய போட்டுட்டு போயிட்டே.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

’எனக்கு உம்மேலத்தான் டவுட்டுன்னு’ நிஷா சரியாக சோம்ஸைக் கைகாட்டினார். ‘மாமியா மேல சத்தியமா நான் எடுக்கலனு சொன்னதும், நம்பிட்டார். அப்பறம் பாலா மேல எல்லோருக்கும் சந்தேகம் வந்துச்சு. ஏன்னா, ஆரம்பித்திலேருந்தே நான் திருடப் போறேன்.. திருடப் போறேன்னு சொல்லிட்டே இருந்தார். கேபியிடம் எப்படித் திருடலாம்னு ரூட்டெல்லாம் போட்டுக்கொடுத்தார்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. உயில்தான் என் உயிர். என் உயிர்தான் என் உயில்னு சொல்லிட்டு, ’பத்து நிமிஷம் டைம் கொடுப்பேன்… அதுக்குள்ள திருடினவன் ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்து உயிலை வெச்சிடணும்;னு டயலாக் பேசிட்டு இருந்தார். சோம்ஸ், ரம்யா, கேபி பெரிய சாதனையை செய்துவிட்ட உற்சாகத்தில் மிதந்தார்கள். அதுவும் சோம்ஸ் அடிக்கடி கேமரா முன் நின்று, இந்த வாய்ப்பை கொடுத்தற்கு நன்றியெல்லாம் சொல்லிட்டு இருந்தார். திருடன் கேரக்டருக்கே இந்தளவு சந்தோஷப்படுறீயே…. சரி விடு.

பாலாவின் தங்கச்சி ஷிவானியா?  என்ன ஒரு ட்விஸ்ட்! – பிக்பாஸ் 37-ம் நாள்

ஆக… இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா… என பிக்கியின் பின்கதை சுருக்கத்தோடு நன்றி வணக்கம் போட்டுட்டார்கள்.