370 புதிய பேருந்துகள் இயக்கம்: கொடியசைத்துத் துவங்கி வைத்தார் முதல்வர்..

 

370 புதிய பேருந்துகள் இயக்கம்: கொடியசைத்துத் துவங்கி வைத்தார் முதல்வர்..

சென்னைக்கு  30 பேருந்துகள், கோவைக்கு  40 பேருந்துகள், சேலத்திற்கு  37 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 41 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 27 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள் வீதம் 8 பணி மனைகளுக்கு வழங்கப் படப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

தமிழகத்தில் சுமார் ரூ.109 கோடி செலவில் மக்களின் வசதிக்காக 370 பேருந்துகள் புதிதாக இயக்கப் படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனையடுத்து இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் புதிதாகத் தயாரிக்கப் பட்ட 370 பேருந்துகளையும் கொடியசைத்துத் துவங்கி  வைத்தார். 

Edapadi palanisamy

மேலும், அந்த 370 பேருந்துகளும் சென்னைக்கு  30 பேருந்துகள், கோவைக்கு  40 பேருந்துகள், சேலத்திற்கு  37 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 41 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 27 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள் வீதம் 8 பணி மனைகளுக்கு வழங்கப் படப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வர் சுமார் ரூ.140 கோடி செலவில்  555 பேருந்துகளைத் துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது