37 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவை தொடக்கம்…!

 

37 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்கு விமானச் சேவை தொடக்கம்…!

1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரால் ஆங்காங்கே குண்டுகள் வீசப்பட்டு ரத்த பூமியாக மாறியது. அதனால், பலாலி இடத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. 

கடந்த 1940 ஆண்டு நடந்த உலகப் போரின் போது ஆங்கிலேயர்களின் விமானச் சேவைக்காக இலங்கையில் உள்ள பலாலி எனும் இடத்தில் விமானத் தளம் அமைக்கப்பட்டு, தென்னிந்திய விமானங்கள் அங்கு இயக்கப் பட்டு வந்தன. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரால் ஆங்காங்கே குண்டுகள் வீசப்பட்டு ரத்த பூமியாக மாறியது. அதனால், பலாலி இடத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. 

Flight

இலங்கையின் உள்நாட்டுப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மீண்டும் சர்வதேச விமானச் சேவையை துவங்குவதற்காக இந்தியா சுமார் 300 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் துறை அமைச்சர் பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்கும் பணியைத் துவக்கி வைத்தார். 

Flight

தற்போது இலங்கை பலாலி விமான நிலையத்தின் அனைத்து புனரமைப்பு சேவைகளும் நிறைவடைந்த நிலையில் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்கு மீண்டும் துவங்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு காலை 8.45 மணியளவில் ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது. மேலும், திருச்சியிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக விமான சேவைகள் இயக்கப் படப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.