37 ஆண்டுகளில் 2 கோடி கார்கள் விற்பனை! புதிய வரலாறு படைத்த மாருதி நிறுவனம்…..

 

37 ஆண்டுகளில் 2 கோடி கார்கள் விற்பனை! புதிய வரலாறு படைத்த மாருதி நிறுவனம்…..

37 ஆண்டுகளில் மொத்தம் 2 கோடி கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி இந்தியா விளங்குகிறது. நாட்டில் அதிகம் விற்பனை டாப் 10 கார் மாடல்களில் பெரும்பாலானவை மாருதி நிறுவனத்துடையதாக உள்ளது. மாருதி நிறுவனத்தின் கார்கள் தரத்திலும், வடிவமைப்பிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளன.

மாருதி 800

மாருதி சுசுகி நிறுவனம் 1983 டிசம்பர் 14ம் தேதியன்று இந்தியாவில் தனது முதல் காரை விற்பனை செய்தது. அப்போதுதான் மிகவும் பிரபலமான மாருதி 800 காரை மாருதி நிறுவனம் சந்தையில் களம் இறக்கியது. அதுமுதல் கடந்த 37 ஆண்டுகளாக அந்நிறுவனம் நம் நாட்டு வாகன சந்தையில் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் மட்டும் ஒட்டு மொத்த அளவில் 2 கோடி  பயணிகள் வாகனங்கள் விற்பனை என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. 

மாருதி கார் தயாரிப்பு ஆலை

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இது தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், 37 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளோம். முதல் 29 ஆண்டுகளில் 1 கோடி கார்களை விற்பனை செய்து இருந்தோம். ஆனால் அதற்கு அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 1 கோடி கார்களை விற்பனை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.