360 இந்திய மீனவர்களுக்கு விடுதலை: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

 

360 இந்திய மீனவர்களுக்கு விடுதலை: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 385 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 385 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

இந்திய மீனவர்கள்  சிறை

fishermen

 

இந்திய எல்லையைத்  தாண்டி மீன் பிடித்துவிட்டதாகக் கூறி, மற்ற நாடுகள் இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மற்ற நாட்டு மீனவர்களையும்  இந்தியக் கடற்படையினர்  கைது செய்வார்கள்.அதன்படி பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்கும்படி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்துக்கு அண்மையில் இந்திய அரசு ஒரு கடிதத்தை அனுப்பியது. 

360 மீனவர்கள் விடுதலை 

india pak

இந்நிலையில் பாகிஸ்தானில் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

வாரத்திற்கு 100 மீனவர்கள்  விடுவிப்பு

fishermen

வாரத்திற்கு 100 மீனவர்கள் வீதம் விடுதலைசெய்யப்படுவார்கள். முதற்கட்டமாக 100 இந்திய மீனவர்கள் வரும் திங்கட்கிழமை  விடுவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள்  வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ஏப்ரல் 29ஆம் தேதியுடன் முழுவதுமாக அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இம்மாதத்தில் விடுதலை செய்யவுள்ள  360 மீனவர்களில் 355 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, மனைவியை கொன்ற கணவன்: சென்னையில் நடந்த கொடூரம்!