36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

 

36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

சித்தப்பாதான் எங்க தலைவர். என்.சி.பி.-பா.ஜ.க. கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை தரும் என மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் யாருமே எதிர்பாராத வண்ணம் கடந்த சனிக்கிழமையன்று காலையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் துணை  முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து அஜித் பவார் பா.ஜ.க. பக்கம் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு. கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார்

மேலும், அஜித் பவார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து அஜித் பவார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வளவு சம்பவங்கள் நடந்தபிறகும் அஜித் பவார் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் துணை முதல்வராக பதவியேற்ற சுமார் 36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்.

சரத் பவார்

அதில், நான் என்.சி.பி. (தேசியவாத காங்கிரஸ்) இருக்கிறேன் மற்றும் எப்போதும் என்.சி.பி.யில் இருப்பேன் மற்றும் (சரத் பவார்) சாகேப் எங்களது தலைவர். எங்களது பா.ஜ.க.-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை அளிக்கும். மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக அது உண்மையாக உழைக்கும் என அஜித் பவார் பதிவு செய்து இருந்தார். இதற்கிடையே நேற்று இரவு முதல்வர் பட்னாவிஸை திடீரென அவரது இல்லத்துக்கு சென்று அஜித் பவார் சென்று சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.